search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எகிப்து அணி"

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #WorldJuniorSquash #Championship #Egypt
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்தது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் எகிப்து, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் ஆட்டத்தில் எகிப்தின் மார்வன் டாரெக் 12-10, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்க் வாலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எகிப்தின் ஓமர் எல் டோர்கி 13-11, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் சாம் டோட்டை வீழ்த்தினார். இதையடுத்து 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இதற்கிடையே, இந்த போட்டிக்காக சென்னைக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்க ஸ்குவாஷ் அணியின் மேலாளரும், பயிற்சியாளருமான கிரஹாம் பிரையர் (வயது 67) நேற்று மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அணி வீரர்களுடன் பஸ்சில் ஏறுவதற்கு புறப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். #WorldJuniorSquash #Championship #Egypt 
    ×